Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கு 90% கடனுதவி

உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கு 90% கடனுதவி

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் பிரதமரின் உணவு பதப்படுத்தல் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

பகிரவும் WhatsApp Facebook

உணவு பதப்படுத்தும் மற்றும் வேளாண் சார்ந்த மதிப்பு கூட்டு தொழிலில் ஈடுபடுவோருக்கு ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் பிரதமரின் உணவு பதப்படுத்தல் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (PMFME), மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்குத் தகுதியான திட்ட மதிப்பீட்டில் 90 சதவீதம் கடன் வழங்கப்படும்.

மேலும், 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் https://pmfme.mofpi.gov.in/pmfme என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்யலாம் அல்லது உரிய ஆவணங்களுடன் மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை அணுகலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
போருக்கு தயாராகுங்கள் - வடகொரிய ராணுவத்துக்கு கிம் உத்தரவு
அடுத்த செய்தி
France's mounting debt crisis raises risk of fresh Eurozone turmoil

தொடர்புடைய செய்திகள்